தென் கொரியாவில் கோலாகலமாக தொடங்கியது ‘2018 குளிர்கால ஒலிம்பிக்’!

தென் கொரியாவில் கோலாகலமாக தொடங்கியது ‘2018 குளிர்கால ஒலிம்பிக்’!

பியாங்சாங்: 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் இன்று கோலாகலமாக தொடங்கியது.

2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவில் இன்று தொடங்கி, வருகிற 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஸ்கையிங், ஸ்கேட்டிங், ஐஸ் ஹாக்கி, ஸ்கை ஜம்பிங், ஸ்னோ போர்டிங் உட்பட மொத்தம் 15 விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இது தவிர, 102 கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தியா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உட்பட 92 நாடுகளை சேர்ந்த 2,952 வீரர்-வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழா கோலாகலமாக இன்று தொடங்கியது. அப்போது நிகழ்ச்சியின் ஒருபகுதியாக குளிர்கால ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, கண்கவரும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை 35,000-க்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்தனர்.

winter olympic 2018 south korea skying skating ice hockey sky jumping 2018 குளிர்கால ஒலிம்பிக் தென்கொரியா ஸ்கையிங் ஸ்கேட்டிங் ஐஸ் ஹாக்கி
விளையாட்டு

Leave a comment

Comments