ரொம்ப அழுதேன் , நிறைய சிரிச்சேன்.. அருவி படத்தை பார்த்து படக்குழுவை பாராட்டிய ரஜினி !

ரொம்ப அழுதேன் , நிறைய சிரிச்சேன்.. அருவி படத்தை பார்த்து படக்குழுவை பாராட்டிய ரஜினி !

சென்னை: அருவிதிரைப்படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கியுள்ளார்.
 
சமீபத்தில் வெளியான அருவிதிரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. அது மட்டுமன்றி படத்தைப் பார்த்த பிரபலங்களும் சமூகவலைதளங்களில் அருவியை பெரிதும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அருவிபடத்தின் இயக்குநர் அருண்பிரபுவை தொலைபேசியில் அழைத்து பாராட்டியிருந்தார்.
 
அதை தொடர்ந்து, தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் அருண்பிரபு மற்றும் நாயகி அதிதிபாலனை நேரில் அழைத்து சிறந்த படைப்பை தந்ததற்காக இருவருக்கும் தங்க செயினை பரிசாக அளித்துள்ளார். அருவிபடத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபுவையும் வாழ்த்திய ரஜினிகாந்த், அவர் என்ன படங்களையெல்லாம் தயாரித்துள்ளார் என்பதை கேட்டுள்ளார்.
 
அதற்கு பதிலளித்த எஸ்.ஆர்.பிரபு, தேசிய விருது பெற்ற ஜோக்கர் மற்றும் மாநகரம் , தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை தயாரித்துள்ளதாக கூறியுள்ளார். நீங்கள் தயாரித்த எல்லா படங்களையும் நான் பார்த்துவிட்டேன் எல்லா படங்களும் தரமான படங்கள். இதை போன்ற படங்களை தொடர்ந்து தயாரியுங்கள்என்று அவரிடம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இயக்குநர் அருண் பிரபுவை பாராட்டிய ரஜினிகாந்த் பேசுகையில், “அருவி மிகவும் அறிவார்ந்த படம். படத்தைப் பார்த்து ரொம்ப அழுதேன். நிறைய சிரித்தேன். நான் தனியாக படத்தை பார்க்கும் போது திரையரங்கில் உட்கார்ந்து பார்த்த ஒரு உணர்வு ஏற்பட்டது. இந்த படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும். இந்த படத்தை கொடுத்ததற்காக எங்களை போன்ற மக்கள் உங்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். உங்களை போன்ற ஆட்கள் கண்டிப்பாக ரொம்ப நாள் சினிமாவில் இருக்கணும். படத்துக்கு பொங்கல் வரைக்கும் பப்ளிசிட்டி பண்ணுங்கஎன்று கூறினார்.

rajinikanth aruvi tamil cinema kollywood ரஜினிகாந்த்
சினிமா

Leave a comment

Comments