ஐசிசி இயக்குனராக பெப்சிகோ சேர்மன் இந்திரா நூயி நியமனம்

ஐசிசி இயக்குனராக பெப்சிகோ சேர்மன் இந்திரா நூயி நியமனம்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தன்னாட்சி பெண் இயக்குனராக பெப்சிகோ நிறுவனத்தின் சேர்மன் இந்திரா நூயி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தனிப்பட்ட இயக்குனராக பெப்சி நிறுவனத்தின் சேர்மன் இந்திரா நூயி வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி.யின் முதல் தனிப்பட்ட பெண் இயக்குனர் இந்திரா நூயி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

இதுகுறித்து இந்திரா நூயி கூறுகையில் ‘‘எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும், இளம் வயதில் கல்லூரி காலங்களில் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். ஆரோக்கியமான போட்டி, நேர்மை, குழு ஒற்றுமை போன்றவற்றை கிரிக்கெட்டிலிருந்து கற்றுக் கொண்டேன். இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் நபர் நான் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

இந்திரா நூயி வருகிற ஜூன் மாதத்தில் இருந்து தன்னாட்சி இயக்குனர் பதவியை ஏற்க இருக்கிறார்.

Indra Nooyi director ICC cricket india sports PepsiCo இந்திரா நூயி இயக்குனர் ஐசிசி கிரிக்கெட் இந்தியா விளையாட்டு
விளையாட்டு

Leave a comment

Comments