ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி - சென்னை நாளை பலப்பரீட்சை

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி - சென்னை நாளை பலப்பரீட்சை

டெல்லி: ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலில் மோசமான இடத்தில் இருக்கும் டெல்லி, சென்னையை எதிர்கறது.

4வது சீசன் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலில் மோசமான இடத்தில் இருக்கும் டெல்லி, சென்னையை எதிர்கொள்கிறது. அதில், டெல்லி வெற்றி பெற்றாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. அதனால், பெருமைக்காக விளையாடும். ஆனால், தோல்வி அடைந்தால், முதல் 4 இடத்திற்குள் இருக்கும்சென்னையை பாதிக்கும். சென்னை அணி தற்போது, 23புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. ஒரு வெற்றி பெற்றால், அந்த அணியை 2வது இடத்திற்கு அழைத்துச்செல்லும். மாறாக தோல்வி அடைந்தால், நம்பமுடியாத அளவிற்கு இழப்பை ஏற்படுத்தும். இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இரவு 8மணிக்கு தொடங்குகிறது.

சென்னை அணியானது, கடந்த 10 போட்டிகளில் ஒவ்வொரு மாற்று ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக தோல்வி அடைந்ததும் அடங்கும். அதே நேரத்தில், டெல்லி அணியானது, இதுவரை இரண்டே போட்டியில் தான் வெற்றி பெற்றுள்ளது.

அடுத்த போட்டி பற்றி பேசிய டெல்லி தலைமை பயிற்சியாளர்  மிகுவெல் ஏஞ்சல் போர்ச்சுக்கல், “காரணம் மிகவும் எளிது, பந்து தரையில் இருக்கும் போது நாங்கள் நன்றாக விளையாடுவோம், வேகம், கட்டுப்பாடுகள் மற்றும் நல்ல சேர்த்தல் ஆகியவற்றைக் கொண்டு நாங்கள் சரியான முறையில் விளையாடுகிறோம், ஆனால் நாங்கள் தாக்கப்படும்போது, பந்து அந்தரத்தில் இருப்பதால் போது சிக்கல் வருகிறது.” என்று கூறினார்.

போட்டி அட்டவணையில் தனது பக்கத்தின் நிலைப்பாட்டை விளக்க அவர் முயற்சிக்கிறார். வான்வெளி தாக்குதல்களை எதிர்கொள்ளும்போது அணியின் திறமையற்ற தன்மையைப் பற்றி பேசினார். அதனால், சென்னை அணியின் பலவீனத்தை துல்லியமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சென்னை அணியின் பயிற்சியாளரான ஜான் க்ரிகோரியிடம் கையில் ஒரு விளையாட்டை வைத்துக் கொள்ளலாம். ஆனால், அணியை சுழற்றுவது மற்றும் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வெடுக்க சொல்லலாம். இதுபற்றி பேசிய அவர், “என்னுடைய சிறந்த அணியை வைத்து எப்போதும் விளையாடுகிறேன் என நம்புகிறேன். அதனால், நாளைய போட்டியில் மாற்றம் இருக்காது. அணியில் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறோம், மற்றும் ஒரு வீரர் மட்டுமே இடைநீக்கத்தில் இருக்கிறார்.

கடந்த போட்டியில் 10 பேருடன் விளையாடினோம். அவர்கள் எல்லாவற்றையும் கொடுத்தார். நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடுவோம். அத்துடன், முதல் 4 இடத்திற்குள் இருப்போம்.” என்றார். க்ரிகோரி அதை சுலபமாக எடுத்துக்கொள்வதில்லை, ஆனால், ஏற்கனவே வென்ற ஒரு ஆட்டத்தைப் பற்றி பேசவது முட்டாள்தனமாக இருக்கும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பொதுவாக அவர்களிடம் எதுவும் இல்லை என நீங்கள் கூறலாம். அவர்கள் விளையாடுவது, பெருமைக்காக மட்டுமே என சொல்லலாம். ஆனால்அவர்கள் சென்னையில் நன்றாக விளையாடினார்கள், ஆனால் அணியில் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள், ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்கள் சரியான வழியில் செல்லவில்லை, சில திறமையான வீரர்கள் அவர்களுக்கு  கிடைத்திருக்கிறார்கள், இருப்பினும் நாங்கள் நாளைய போட்டியில் வெற்றி பெற முயற்சிப்போம்.”
என்றார்.

வெளியூர் மைதானங்களில் சில போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி, டெல்லிக்கு எதிராக 2-2 என டிரா செய்தது. இந்த முறை டெல்லி அணி சிறந்த
முடிவை எதிர்பார்க்கிறது.

ISL Delhi Chennai ஐஎஸ்எல் டெல்லி சென்னை
விளையாட்டு

Leave a comment

Comments