மகாராஷ்டிரா டெர்பி: வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை!

மகாராஷ்டிரா டெர்பி: வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை!

மும்பை: 4வது சீசன் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் வது லீக் போட்டி மும்பையில் உள்ள அரேனா விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30மணிக்கு தொடங்க உள்ளது. 

இந்த போட்டியில், 2வது மகாராஷ்டிரா டெர்பி அணியான எஃப்.சி புனே சிட்டியை, வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் மும்பை களமிறங்குகிறது. உள்ளூர்அணியான மும்பைக்கு முதல் நான்கு இடங்களுக்குள் நுழைய வெற்றியைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. இது அந்த அணியின் தலைமை பயிற்சியாளர்அலெக்ஸாண்ட்ரே குய்மாரேஸ்-க்கும் அவரது அணி வீரர்களுக்கும் நன்றாக தெரியும்.

அடுத்த போட்டி குறித்து செய்தியாளர் சந்திப்பில் குய்மாரேஸ் பேசுகையில், “வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றிகளைப் பெற்றால், இந்த சீசனை வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும். வீரர்களும் அதை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். நாளைய போட்டி எங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.” என்றார்.

தற்போது, மும்பை அணி 13போட்டிகளில் விளையாடி 17புள்ளிகளுடன் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. ஆனால், மும்பை வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும். ஏனென்றால், கடந்த 3 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. 1-2 என ஜாம்ஷெட்பூர் இடமும், 1-3 என பெங்களூரு இடமும், 0-1 என கேரளா இடமும் தோல்வி அடைந்தது.

அணியின் ஆட்டம் பற்றி பேசிய குய்மாரேஸ், “உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் 4 இடத்தில் இருக்கும்அணிக்கு எதிராக நாங்கள் விளையாடுகிறோம். அவர்கள் இலக்கை நெருங்கி விட்டார். அதனால், அவர்கள் அழுத்தம் தர முயற்சிப்பார்கள். ஆனால், நாங்கள்தயாராக இருக்கிறோம். நாங்கள் எங்களுடைய சிறப்பான விளையாட்டை தொடர்ந்து காட்டுவோம்.” என்று கூறினார்.

நாளைய புனேவுக்கு எதிரான போட்டியில் தவறான கோல் ஷாட்களை அடிக்கும் முன்கள வீரர் பல்வந்த் சிங் சிறப்பாக செயல்படுவார் என குய்மாரேஸ் நம்புகிறார். “ஒவ்வொரு வீரருக்கும் மோசமான நாள் இருக்கும். நாளை போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார்.” என்று கூறினார்.

மறுபுறம், புனே அணி, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. அதனால், அவர்கள் தங்கள் இடத்தை மேலும் வலுப்படுத்த நினைப்பார்கள். எல்லைக் கோட்டி விதிமுறையை மீறியதால், அணியின் பயிற்சியாளர் ராங்கோ போபோவிச் கடந்த போட்டியில் வரவில்லை. கடந்த போட்டியில் நார்த் ஈஸ்ட்
அணியை புனே வீழ்த்திய உற்சாகத்தில் இருக்கிறது.

புனே அணி, 14போட்டிகளில் விளையாடி 25புள்ளிகளுடன் ஐ.எஸ்.எல் வரலாற்றில் முதல் முறையாக முதல் 4 இடத்திற்குள் இருக்கிறது. ஆனால், செய்தியாளர்சந்திப்பில் பேசிய உதவிப்பயிற்சியாளர் விளாடிகா க்ருஜிக், அனைத்து போட்டிகளில் கடினமானது என எச்சரித்தார். அப்போது பேசிய அவர், “ஐ.எஸ்.எல்தொடரில் எந்த போட்டியில் எளிதானது அல்ல. நாளை போட்டியில் சரியான முடிவு கிடைக்க நன்றாக விளையாடுவோம்.” என்றார். கடந்த நவம்பரில் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், புனே அணி 2-1 என மும்பையை வென்றது.

ISL Mumbai Pune Maharasthra football ஐஎஸ்எல் புனே மகாராஷ்டிரா
விளையாட்டு

Leave a comment

Comments