கோலிவுட்டை எட்டிப்பார்க்கும் ‘அர்ஜுன் ரெட்டி’!:

கோலிவுட்டை எட்டிப்பார்க்கும் ‘அர்ஜுன் ரெட்டி’!:

சென்னை: ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் ரசிகர் பட்டாளத்தை கவர்ந்த விஜய் தேவரகொண்டா தற்போது தமிழில் அறிமுகமாகிறார்.

சீயான் விக்ரமின் ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா கோலிவுட்டில் களமிறங்கவிருக்கிறார்.

இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கவிருக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதனை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

இப்படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஷூட்டிங் பிளான் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி ஸ்டூடியோ க்ரீன் ஆனந்த் ஷங்கர் தமிழ் எண்ட்ரி Vijay Devarakonda Arjun Reddy Studio Green Anand Shankar
சினிமா

Leave a comment

Comments