சென்னை ஓபன் ஏ.டி.பி சாலஞ்சர்: அர்ஜூன் காடேவிடம் வீழ்ந்தார் சாகேத் மைனேனி

சென்னை ஓபன் ஏ.டி.பி சாலஞ்சர்: அர்ஜூன் காடேவிடம் வீழ்ந்தார் சாகேத் மைனேனி

சென்னை: சென்னை ஓபன் ஏ.டி.பி சாலஞ்சர் தொடரின் முதல் சுற்றில் சாகேத் மைனேனி 1-2 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில், சென்னை ஓபன் ஏ.டி.பி சாலஞ்சர் தொடர் நடைபெற்று வருகிறது. ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் சாகேத் மைனேனி மற்றும் அர்ஜூன் காடே மோதினர். டை பிரேக்கர் வரை முதல் சுற்று நீண்டது. அதன் பின்பு 7-6 என்ற கணக்கில் முதல் செட்டை மைனேனி வென்றார்.

இதைத் தொடர்ந்து, 6-3 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை அர்ஜூன் காடே கைப்பற்றினார். இதனால், வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்பாக நடந்தது. இறுதியில், 6-4 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை அர்ஜூன் காடே வென்றார். இதன் காரணமாக 2-1 என்ற செட் கணக்கில் சாகேத் மைனேனியை வீழ்த்தினார் அர்ஜூன் காடே. இத்தொடரின் மற்றொரு ஆட்டத்தில் தாய்லாந்து வீரர் விஷயாவிடம், 2-1 என்ற செட் கணக்கில் தமிழக வீரர் ஸ்ரீராம் பாலாஜி தோல்வியுற்றார்.

saketh myneni arjun khade chennai open atp challenger chennai open atp challenger india nungambakkam சென்னை ஓபன் ஏ.டி.பி சாலஞ்சர் சாகேத் மைனேனி அர்ஜூன் காடே ஏ.டி.பி சாலஞ்சர் இந்தியா
விளையாட்டு

Leave a comment

Comments