அருமையான வாய்ப்புகளை வீணடித்து விட்டோம்: இந்திய அணி கேப்டன் விராட் கோலி

அருமையான வாய்ப்புகளை வீணடித்து விட்டோம்: இந்திய அணி கேப்டன் விராட் கோலி

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் அருமையான வாய்ப்புகளை வீணடித்து விட்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இந்திய அணி, 6 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் 3 ஒருநாள் போட்டிகளை தொடர்ச்சியாக வென்ற இந்திய அணி, நேற்று முன்தினம் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு 290 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால், போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி ஆட்டம் 28 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்கு 202 ரன்களாக மறு நிர்ணயம் செய்யப்பட்டது. இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 25.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:


“மழைக்குப் பிறகு நடைபெற்ற ஆட்டம் ஒரு டி20 போட்டி போலவே அமைந்துவிட்டது. இதனால், இலக்கை துரத்துவது தென் ஆப்பிரிக்க அணிக்கு எளிதாகிவிட்டது. அது மட்டுமில்லாமல், சில அருமையான வாய்ப்புகளையும் நாங்கள் வீணடித்துவிட்டோம். அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது”


இவ்வாறு அவர் தெரிவித்தார்.


4-வது ஒருநாள் போட்டியில் தோற்றிருந்தாலும், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இன்னும் 1 போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரைக் கைப்பற்றும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், 5-வது ஒருநாள் போட்டி வருகிற நாளை போர்ட் எலிசபெத்தில் நடைபெறுகிறது.

team india cricket virat kohli south africa johannesburg port elizabeth இந்திய அணி கிரிக்கெட் விராட் கோலி தென் ஆப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க்
விளையாட்டு

Leave a comment

Comments