5-வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

5-வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

போர்ட்எலிசபெத் (தென் ஆப்பிரிக்கா): இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 5-வது ஒருநாள் போட்டி தென் ஆப்பிரிக்காவின் போர்ட்எலிசபெத்தில் பகலிரவு ஆட்டமாக இன்று நடைபெறுகிறது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இந்திய அணி, 6 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

அதன்படி, டர்பன், செஞ்சூரியன். கேப்டவுன் ஆகிய நகரங்களில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் முறையே இந்திய அணி 6 விக்கெட், 9 விக்கெட் மற்றும் 124 ரன்கள் வித்தியாசங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது.

இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 5-வது ஒருநாள் போட்டி தென் ஆப்பிரிக்காவின் போர்ட்எலிசபெத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இன்று நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வென்று தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் போட்டி தொடரை வென்று புதிய சரித்திரம் படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. அந்த அணி தோல்வி கண்டால் தொடரை இழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்ட்எலிசபெத் மைதானத்தில் இந்திய அணி இதுவரை இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்ததில்லை. அதேபோல், தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், சொந்த மண்ணில் தொடரை இழந்து விடாமல் இருக்க தென் ஆப்பிரிக்க அணியும் களமிறங்குவதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்தியா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் ஒரு நாள் கிரிக்கெட் விளையாட்டு செய்திகள் Sports news India South Africa Cricket
விளையாட்டு

Leave a comment

Comments