பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு; மகாராஷ்டிரா முதல்வர் மீது 22 வழக்குகள்: ஆய்வில் தகவல்

பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு; மகாராஷ்டிரா முதல்வர் மீது 22 வழக்குகள்: ஆய்வில் தகவல்

டெல்லி: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தையும், அதிக வழக்குகள் உள்ள முதல்வர்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதல்வர் முதலிடத்தையும் பிடித்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு, பல்வேறு மாநில முதல்வர்களின் பின்னணி குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. முதல்வர்கள் அளித்த சுயநிர்ணய தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.177 கோடி மதிப்புள்ள சொத்துகளுடன் முதல் இடத்திலும், அருணாசலப்பிரதேச முதல்வர் பீமா காண்டு ரூ 129 கோடி சொத்து மதிப்புகளுடன் இரண்டாம் இடத்திலும், ரூ.48 கோடி மதிப்புள்ள சொத்துகளுடன் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் சொத்து மதிப்புகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்..

இந்திய முதல்வர்களிலேயே மிகவும் ஏழ்மையான முதல்வராக, ரூ.26 லட்சம் சொத்து மதிப்புடன் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் முதல் இடத்திலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரூ.30 லட்சம் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், ரூ.55 லட்ச ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியும் உள்ளனர். 

அதேசமயம், 22 வழக்குகளுடன் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் முதலிடத்திலும், 11 வழக்குகளுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் 2-ஆம் இடத்திலும், 11 வழக்குகளுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 3-ஆம் இடத்திலும் உள்ளனர்.

india chiefm ministers mamta banaerjee chandra babu naidu manik sarkar இந்தியா முதல்வர்கள் மம்தா பானர்ஜி
தமிழகம்

Leave a comment

Comments