‘கோயில் நகரம்’ கும்பகோண சிவாலயங்களில் ’மகா சிவராத்திரி’ கொண்டாட்டம்!

‘கோயில் நகரம்’ கும்பகோண சிவாலயங்களில் ’மகா சிவராத்திரி’ கொண்டாட்டம்!

கும்பகோணம்: மகாசிவராத்திரியை முன்னிட்டு  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ‘மகா சிவராத்திரி’ தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் சிவாலயங்களுக்கு வந்து இரவு முழுவதும் விழித்திருந்து 4 சாம பூஜைகளிலும் பங்கேற்கின்றனர். 

தல வரலாறு:

கையிலாய மலையில் பந்து விளையாட விரும்பிய பார்வதிக்காக 4 வேதங்களையும் பந்தாக மாற்றி கொடுத்தார் சிவபெருமான். பார்வதியின் விளையாட்டிற்கு ஏதுவாக சூரியன் மறையாமல் இருந்ததால், சந்தியாவதவன் செய்ய இயலாமல் வாடும் முனிவர்கள் சிவனிடம் முறையிட்டுள்ளனர்.


இது குறித்து பார்வதியிடம் எடுத்துறைக்க வந்த சிவனை தேவி கண்டுகொள்ளாததால் கோபமடைந்த எம்பெருமான், பூமியில் பசுவாக பிறக்க சாபமிட்டார். சாப விமோசனம் பெற சரக்கொன்றை மரத்தின் கீழ் சிவலிங்கத்தில் பால்சொறிந்து வரும்படி கூறியுள்ளார்.

பார்வதியை காக்கும் பொருட்டு இடையானாக சென்று விஷ்ணு பகவான் உதவியுள்ளார். பசுவானது புற்றில் பால் சொறிவதைக் கண்டு, பசுவினை அடிக்க அது துள்ளிக் குதித்து புற்றினை உடைத்து அதிலிருந்த லிங்கத்தினை வெளிப்படுத்திய பின்னர் தெய்வ ரூபமாக பார்வதி தோன்றினார் என தல வரலாறு கூறுகிறது.

 

கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்ததில் நீராடி வழிபட்டால் பார்வை சீராகும். மேலும், பித்ருக்கலால் ஏற்படும் தோஷம், திருமணத்தடை, மனநிலை பாதிப்பு, பயந்த சுபாவம், கடனால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் பலன் நிச்சயம்.

இங்கு சிவன் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

மகா சிவராத்திரி பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் பார்வதி சிவபெருமான் கையிலாயம் சிவலிங்கம் Shivaratri Maha Shivaratri Siva Lord Siva Pandhanallur Pasubatheeshwarar temple Shivalingam
ஆன்மிகம்

Leave a comment

Comments