ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழாவில் மோடி பங்கேற்பார்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழாவில் மோடி பங்கேற்பார்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

சென்னை: ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்தை சட்டசபையில் திறக்கவும், அவருக்கு நினைவிடம் எழுப்பவும் தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி ஜெயலலிதாவின் திருவுருவ படம் சட்டசபையில் நேற்று திறக்கப்பட்டது. இப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்துவைத்தார். ஆனால் இதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. முன்னதாக சட்டசபையில் வைக்கப்பட்டு இருக்கும் திருவுருவப்படத்தை பிரதமர் மோடியை கொண்டு திறந்து வைக்க தமிழக அரசு முடிவு செய்து நேரம் கேட்டதாகவும், ஆனால் பிரதமர் மோடி ஜெயலலிதாவின் திருவுருவ படத்தை திறந்து வைக்க வருகை தரவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. அவ்வாறு கலந்து கொள்ளும் பட்சத்தில் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது என சில பேர் கூறுவார்கள். ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் திறந்து வைத்ததில் எந்த தவறும் இல்லை. மாநில வளர்ச்சிக்காகவே மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் தமிழக அரசு உள்ளது என்றார்.

jayalalithaa jayakumar modi bjp admk ஜெயலலிதா ஜெயக்குமார்ம் மோடி பாஜக
தமிழகம்

Leave a comment

Comments