இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 14 சதவீதம் வளர்ச்சி: ஐடிசி ஆய்வில் தகவல்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 14 சதவீதம் வளர்ச்சி: ஐடிசி ஆய்வில் தகவல்

டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 2017-ஆம் ஆண்டில் 14 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக ஐடிசி ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

கடந்த ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் செயல்பாடுகளை ஐடிசி (International Data Corporation) நிறுவனம் ஆய்வு செய்தது. அதன்படி, 2017-ஆம் ஆண்டில் 124 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம், இந்திய ஸ்மார்ட்போன் சந்தை நாளுக்கு நாள் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவது தெளிவாகிறது. உலகில் ஸ்மார்ட்போன் துறை வேகமாக வளர்ச்சியடையும் 20 முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், உலகின் பெரிய ஸ்மார்ட்போன் சந்தை கொண்ட நாடுகளில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது இந்தியா. அதேசமயம், சாதாரண மொபைல்கள் சந்தையைப் பொறுத்தமட்டிலும் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது.

 

இந்தியாவில் மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் துறைகளில் சாம்சங் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டில் மொத்தம் 164 மில்லியன் சாதாரண மொபைல்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டில் 140 மில்லியன் சாதாரண மொபைல்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோ போன் வருகை, சாதாரண மொபைல் சந்தையில் இந்தியாவின் அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. 2017-ஆம் ஆண்டின் 4-வது காலாண்டில் மட்டும் 56 மில்லியன் மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே ஒரு காலாண்டில் விற்கப்பட்ட அதிகபட்ச மொபைல் சாதனங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

mobiles smartphone idc india tech news technology samsung ஸ்மார்ட்போன் மொபைல் ஐடிசி இந்தியா தொழில்நுட்ப செய்திகள்
தொழில்நுட்பம்

Leave a comment

Comments