விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்: அருள்பதி அமோக வெற்றி

விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்: அருள்பதி அமோக வெற்றி

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அருள்பதி அமோக வெற்றி பெற்றார்.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்களை போன்று தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் கடந்த டிச.24ம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் அருள்பதி அணியும், தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ’நாம் அணி’யும் போட்டியிட்டது. வாக்குரிமை பெற்ற 524 பேரில் 469 உறுப்பினர்கள் வாக்களித்ததில், 248 வாக்குகள் பெற்ற அருள்பதி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஞானவேல்ராஜா 194 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த ஞானவேல்ராஜா விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.

இணைச் செயலாளர் பொறுப்பைத தவிர்த்து அருள்பதி தரப்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Arulpathi K.E.Gnanavelraja Tamil Film Distributors Association Election Arulpathi wins Chennai Chenagalpattu Kanchipuram அருள்பதி கே.ஈ.ஞானவேல்ராஜா தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
சினிமா

Leave a comment

Comments