மகா சிவராத்திரியை முன்னிட்டு பாலிவுட் நடிகர், நடிகைகள் டிவிட்டரில் வாழ்த்து

மகா சிவராத்திரியை முன்னிட்டு பாலிவுட் நடிகர், நடிகைகள் டிவிட்டரில் வாழ்த்து

மும்பை: மகா சிவராத்திரியை முன்னிட்டு பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பக்தர்கள் இன்று இரவு முழுவதும் கண்விழித்திருந்து பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்கள். இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு அமிதாப் பச்சன், கஜோல், ஹேமமாலினி, ஸ்ரீதேவி, அனுபம் கேர் உள்ளிட்ட முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நடிகர் அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில், சிவபெருமானின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், “அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை ஸ்ரீதேவி தனது ட்வீட்டில், “இந்த மகா சிவராத்திரி தருணத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். அதேபோல் நடிகை கஜோல், “சிவபெருமானின் சக்தி உங்களுக்கு செழிப்பும் வளமும் தரட்டும். ஹேப்பி மகா சிவராத்திரி” என்று தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

amitabh bachchan hema malini sridevi kajol maha shivaratri bollywood அமிதாப் பச்சன் ஹேம மாலினி ஸ்ரீதேவி கஜோல் மகா சிவராத்திரி
இந்தியா

Leave a comment

Comments