ஜெ.தீபா வீட்டில் போலி வருமானவரித்துறை சோதனை வழக்கில் திடீர் திருப்பம்

ஜெ.தீபா வீட்டில் போலி வருமானவரித்துறை சோதனை வழக்கில் திடீர் திருப்பம்

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வீட்டிற்கு போலி வருமான வரித்துறை அதிகாரி வந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபாவின் வீட்டில் கடந்த 10-ம் தேதி வருமானவரித்துறை அதிகாரி போல் ஒருவர் வந்து வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என கூறினார். அதனையடுத்து தீபாவின் வழக்கறிஞர் கேட்ட கேள்விகளுக்கு சரிவர பதிலளிக்காத அவர் மீது சந்தேகம் வந்ததையடுத்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்ததும் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த அந்த நபர் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து காவல்துறையிடம் சரண் அடைந்த அவர், தனது பெயர் பிரபாகரன் எனவும் விழுப்புரத்தில் தான் ஹோட்டல் வைத்திருப்பதாகவும், தீபாவின் கணவர் மாதவன் கூறியதன் பெயரிலேயே தீபாவின் வீட்டிற்கு போலி வருமான வரித்துறை அதிகாரி போல் வந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்த வீடியோ ஒன்று வெளியானது. மேலும் வருமான வரித்துறை அதிகாரிக்கான போலியான அடையாள அட்டையை மாதவனே கொரியரில் அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்த சம்பவத்தில் மாதவன் சம்பந்தப்பட்டு இருப்பதாக பிரபாகரன் கூறியிருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து, மாதவன் தலைமறைவாக இருப்பதாகவும், முன் ஜாமீனுக்கு அவர் முயன்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், போலி வருமான வரித்துறை அதிகாரியாக பிரபாகரன் நடித்ததற்கும் தீபாவின் கணவர் மாதவனுக்கும் தொடர்பில்லை என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் வருமான வரித்துறை அதிகாரி போல் போலி அடையாள அட்டை, வருமான வரி சோதனைக்கான போலி  கடிதத்தை பிரபாகரனே தயாரித்துள்ளார் எனவும், கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு தீபாவின் வீட்டிற்கு அவர் வருமான வரித்துறை அதிகாரி போல் வந்திருக்கிறார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

madhavan deepa police it raid மாதவன் தீபா
தமிழகம்

Leave a comment

Comments