காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்களின் விற்பனை களைகட்டியது

காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்களின் விற்பனை களைகட்டியது

கன்னியாகுமரி: காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் ரோஜா பூக்களின் விற்பனை களைகட்டியுள்ளது.

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் (Valentine’s Day) கொண்டாடப்படவிருக்கிறது. தங்களின் விருப்பமான துணைக்கு காதலர் தினத்தில் ரோஜா பூ கொடுப்பது காதலர்களின் முக்கிய தேர்வாக உள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று ரோஜா பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்படுகிறது.

இந்நிலையில், காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரி தோவாளை பூச்சந்தையில் ரோஜா பூக்களின் விற்பனை களைகட்டியுள்ளது. பெங்களூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விதவிதமான ரோஜாப்பூக்கள் இந்த சந்தையில் குவிக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பலரும் ஆவலுடன் ரோஜா பூக்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் பூ வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம்

Leave a comment

Comments