அமெரிக்காவில் சிறிய ரக பயிற்சி விமானம் விபத்து; 4 பேர் பலி

அமெரிக்காவில் சிறிய ரக பயிற்சி விமானம் விபத்து; 4 பேர் பலி

சான்டா கிளாரிட்டா: அமெரிக்காவில் சிறிய ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. மலைகள் நிறைந்த பகுதியில் அந்த விமானம் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அந்த விமானம் விபத்தில் சிக்கியது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

விமானத்தில் பயணித்த அந்த 4 பேர் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவில்லை. அதில் 2 ஆண்கள், ஒரு சிறுமி மற்றும் ஒரு குழந்தை பயணித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே, விபத்தில் சிக்கிய விமானத்தின் எரிந்த பாகங்களை லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

flight los angeles usa america world news flight accident விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்கா
உலகம்

Leave a comment

Comments