தலை மறைவு மாதவன் முன் ஜாமீன் பெற முயற்சி?

தலை மறைவு மாதவன் முன் ஜாமீன் பெற முயற்சி?

சென்னை: போலி வருமான வரித்துறை அதிகாரி போல் ஒருவரை நடிக்க வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் தலைமறைவாகி உள்ள ஜெ.தீபாவின் கணவர் மாதவன் முன் ஜாமீன் பெற முயற்சி செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபாவின் வீட்டில் கடந்த 10-ம் தேதி வருமானவரித்துறை அதிகாரி போல் ஒருவர் வந்து வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என கூறினார். அதனையடுத்து தீபாவின் வழக்கறிஞர் கேட்ட கேள்விகளுக்கு சரிவர பதிலளிக்காத அவர் மீது சந்தேகம் வந்ததையடுத்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்ததும் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த அந்த நபர் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த நபர் காவல்துறையிடம் சரணடைந்தார். அப்போது தனது பெயர் பிரபாகரன் எனவும் தீபாவின் கணவர் தனக்கு சினிமா வாய்ப்பு பெற்று கொடுப்பதாகவும் அதற்கு வருமான வரித்துறை அதிகாரி போல் நடிக்க வேண்டும் என கூறியதால் தான் வருமான வரித்துறை அதிகாரி போல் தான் நடித்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, தீபாவின் கணவர் மாதவன் தலைமறைவானார். இதுகுறித்து மாதவன் மீது வழக்கும் பதிவு செய்து, அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் மாதவன் முன் ஜாமீன் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

madhavan deepa police it raid மாதவன் தீபா
தமிழகம்

Leave a comment

Comments