நவகன்னிகைகள் ஸ்தலமான கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலில் மகாசிவராத்திரி பூஜை

நவகன்னிகைகள் ஸ்தலமான கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலில் மகாசிவராத்திரி பூஜை

கும்பகோணம்: பிரசித்தி பெற்ற கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலில் மகாசிவராத்திரி பூஜை கொண்டாடப்படுகிறது.

இத்தலத்தில் பிரதோஷம், சிவராத்திரி, மகாசிவராத்திரி, சிவனுக்குரிய மற்ற தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். தினமும் காலையில் சூரிய பகவான் தனது ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின் மீது படரச் செய்து வழிபடுகிறார்.

தல வரலாறு :

கங்கை, யமுனை, கோதாவரி, குமரி, பயோதினி, சரயு ஆகிய நவகன்னிகைகள், மக்கள் நீராடி தங்களிடம் விட்டுச் செல்லும் பாவங்களை நாங்கள் சுமந்தே தீர வேண்டுமா என்று சிவபெருமானிடம் வேண்டியுள்ளனர்.

நவ கன்னியர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு அவர்களை அழைத்துக் கொண்டு கும்பகோணம் மகாமக தீர்த்தம் என்ற அமுதாவியில் நீராடினால் பாவங்கள் தீரும் என்று அருளினார். சிவனும் இந்த தீர்த்ததின் வடகரையில் எழுந்தருளினார். இதையடுத்து, நவ கன்னியரும் இக்கோவிலில் சிலையாக தோற்றம் அளிக்கின்றனர்.


மேலும், ராவணனை போரில் வீழ்த்த ராமர் ருத்ராட்சம் பெற வேண்டும். இதற்காக அகத்திய முனிவரை வேண்டிய ராமனுக்கு, கும்பகோணம் காசி விஸ்வநாதரை வழிபட வேண்டும் என்று கூறினார். அதன்படி இங்கு வந்த ராமர் ’ருத்ராட்ச’ அம்சம் பெற்றார்.

இத்தலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக திருவிழா மிகவும் வெகு விமரிசையாக நடைபெறும்.

சிவராத்திரி சிவராத்திரி பூஜை மகா சிவராத்திரி மகாமகம் நவகன்னைகைகள் ருத்ராட்சம் கும்பகோணம் காசி விஸ்வநாத் ஸ்வாமிகள் Sivarathiri Maha Sivaratri Kumbakonam Kaasi Vishwanath temple Navakannigal
ஆன்மிகம்

Leave a comment

Comments