ரிலையன்ஸ் ‘ஜியோஃபைபர்’ விரைவில் வெளியீடு?

ரிலையன்ஸ் ‘ஜியோஃபைபர்’ விரைவில் வெளியீடு?

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையான ஜியோஃபைபர்இந்தியாவில் விரைவில் வெளியிடப்படக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

மிகக் குறைந்த விலையில் பிராட்பேண்ட் சேவையை வழங்குவதற்கான சோதனை நடவடிக்கைகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அச்சேவைக்கு ஜியோஃபைபர் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் மூலமாக, குறைந்த விலையில் நொடிக்கு 1 ஜிபி டேட்டா வேகத்தில் இணைய சேவை வழங்கும் பிராட்பேண்ட் திட்டங்களை ஜியோ செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விவரங்கள் வெளியாகாதவாறு ஜியோ நிறுவனம் மிகுந்த பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

 

இந்நிலையில், ஜியோஃபைபர் வெளியீடு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் ஜியோஃபைபர் சேவை வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜியோஃபைபர் சேவைகள் இந்தியாவின் பத்து நகரங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மும்பை, டெல்லி, ஆமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா உள்ளிட்ட இடங்களில் ஜியோஃபைபர் சேவை வழங்கப்படுகிறது.

reliance jio jio broadband india jiofiber tech news technology ரிலையன்ஸ் ஜியோ ஜியோ பிராட்பேண்ட் இந்தியா ஜியோஃபைபர்
தொழில்நுட்பம்

Leave a comment

Comments