இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனம் தொடர்ந்து முதலிடம்

இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனம் தொடர்ந்து முதலிடம்

டெல்லி: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் சாம்சங் நிறுவனம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

இந்தியாவின் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் சாம்சங் நிறுவனம் தொடர்ந்து கோலோச்சிக் கொண்டிருக்கிறது. 2016-2017 நிதியாண்டில் ரூ.34,300 கோடி வருமானத்தை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது. மொத்த உள்நாட்டு ஸ்மார்ட்போன் விற்பனையில் இது 27 சதவீதம் ஆகும். பிரீமியம், மிட் ரேஞ்ச், பட்ஜெட் ஆகிய அனைத்து ஸ்மார்ட்போன் பிரிவுகளிலும் சாம்சங்கின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளதாக சாம்சங் இந்தியா துணைத் தலைவர் ஆசிம் வார்சி தெரிவித்துள்ளார்.

சாம்சங் நிறுவனத்தைத் தொடர்ந்து, ஜியோமி நிறுவனம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 23.5 சதவீதத்தை ஜியோமி நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், ஒவ்வொரு வருடமும் 300 சதவீதம் வளர்ச்சியுடன் ஜியோமி நிறுவனம் வேகமாக முன்னேறி வருகிறது. ஜியோமியைத் தொடர்ந்து மோட்டரோலா-லெனோவோ 9 சதவீதம், விவோ 8.5 சதவீதம், ஓப்போ 7.9 சதவீதம் விற்பனையை இந்தியாவில் கொண்டுள்ளன. இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் விற்பனையை விரைவில் ஜியோமி விஞ்சக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

samsung xiaomi moto-lenovo vivo oppo சாம்சங் ஜியோமி
தொழில்நுட்பம்

Leave a comment

Comments