வீரம் மட்டும் போதாது.. வியூகம் வேண்டும்!: ரஜினிகாந்த்

வீரம் மட்டும் போதாது.. வியூகம் வேண்டும்!: ரஜினிகாந்த்

சென்னை: அரசியலுக்கு வருவதற்கு வீரம் மட்டும் போதாது, வியூகமும் வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் இரண்டாவது கட்டமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மகேந்திரன், கலைஞானம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, அரசியலின் கஷ்ட-நஷ்டங்கள் தெரிந்திருப்பதால் தயங்குகிறேன், அரசியலில் வெற்றி பெற வீரம் மட்டும் போதாது, வியூகமும் வேண்டும். நான் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லை, டிச.31ம் தேதி அரசியல் நிலைபாட்டினை தெரிவிப்பேன். எனது அரசியல் பிரவேசம் பற்றி தெரிந்துக்கொள்ள மக்களை விட ஊடகங்கள் தான் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றன என்று தெரிவித்தார்.

இன்று முதல் தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், முதல் நாளான இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது பேசிய ரஜினிகாந்த், ‘தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 


 

 

ரஜினிகாந்த் அரசியல் வருகை சூப்பர்ஸ்டார் ரஜினி ரஜினி ரசிகர்கள் சந்திப்பு அரசியல் வெற்றி வியூகம் போர் Thalaivar Fans meet Superstar Rajinikanth Rajinikanth Political entry
தமிழகம்

Leave a comment

Comments