ஃபார்மெட் செய்வதால் மட்டுமே ஸ்மார்ட்போன் டேட்டாக்களை முழுவதும் அழிக்க முடியாது

ஃபார்மெட் செய்வதால் மட்டுமே ஸ்மார்ட்போன் டேட்டாக்களை முழுவதும் அழிக்க முடியாது

டெல்லி: டெலீட் அல்லது ஃபார்மெட் செய்வதால் மட்டுமே ஹார்ட் டிஸ்க் மற்றும் ஸ்மார்ட்போன்களில் உள்ள டேட்டாக்களை அழிக்க முடியாது என ஸ்டெல்லார் டேட்டா ரெகவரி நிறுவனம் எச்சரித்துள்ளது.
 
தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்திய ஹார்ட் டிஸ்க், ஸ்மார்ட்போன்கள் குறைவான விலைக்கு சந்தையில் கிடைக்கிறது. பொதுவாக அவற்றை விற்பதற்கு முன், அதை பயன்படுத்திய உரிமையாளர்கள் அதிலுள்ள டேட்டாக்களை டெலீட் அல்லது ஃபார்மெட் செய்து விட்டே விற்பார்கள். இதைச் செய்தால் மட்டும் போதும்...அந்தக் கருவியில் உள்ள டேட்டாக்கள் முற்றிலும் அழிந்து விடும் என்று நினைப்பது தவறான எண்ணமாகும்.
 
பெரிதும் வளர்ந்து விட்ட இன்றைய தொழில்நுட்ப உலகில், ஒரு சாதனத்திலிருந்து அழிக்கப்பட்ட டேட்டாக்களை மீட்டெடுப்பது எல்லாம் மிகவும் எளிதான காரியமாகும். ஏராளமான டேட்டா ரெகவரி மென்பொருட்கள் இணையதளங்களில் இலவசமாக கிடைக்கின்றன. அதனைப் பயன்படுத்தி ஹேக்கர்கள், இணைய குற்றவாளிகள் ஆகியோர் விலைமதிப்புள்ள டேட்டாக்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விடுகின்றனர். எனவே ஒரு எலக்ட்ரானிக் சாதனத்தை விற்பதற்கு முன், அவற்றில் உள்ள டேட்டாக்களை தகுந்த மென்பொருட்கள் உதவியுடன் முற்றிலும் அழிக்க வேண்டும் என ஸ்டெல்லார் டேட்டா ரெகவரி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

தொழில்நுட்பம்

Leave a comment

Comments