பிலிப்பைன்ஸ் நாட்டில் பேருந்து - ஜீப் மோதிக் கொண்ட விபத்தில் 20 பேர் பரிதாப பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் பேருந்து - ஜீப் மோதிக் கொண்ட விபத்தில் 20 பேர் பரிதாப பலி

மணிலா:  பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆகோ நகரில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்றவர்கள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஆகோ நகரைச் சேர்ந்த 29 பேர் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக ஜீப்பில் புறப்பட்டு சென்றனர். மனோவோக் நகரில் உள்ள தேவாலயத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ஜீப், எதிர்பாராதவிதமாக எதிரே வந்த பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
 
இந்த கோர விபத்தில் 29 பேர் பலியானதாக ஆகோ நகரைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த ஒருவரும் லேசான காயமடைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

உலகம்

Leave a comment

Comments