என் அரசியல் நிலைபாடு குறித்து டிச.31ல் அறிவிப்பேன்: ரஜினிகாந்த்

என் அரசியல் நிலைபாடு குறித்து டிச.31ல் அறிவிப்பேன்: ரஜினிகாந்த்

சென்னை: ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த், தனது அரசியல் நிலைபாடு குறித்து டிச.31ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் இரண்டாவது கட்டமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று முதல் தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், முதல் நாளான இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மகேந்திரன், கலைஞானம் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், ‘அரசியல் எனக்கு புதிதல்ல, 1996ம் ஆண்டில் இருந்து நான் அரசியலில் இருக்கிறேன். அதன் ஆழம் தெரிந்ததால் தான் வர தயங்குகிறேன்’ என்றார்.

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஷூட்டிங், மழை, மனம் சரியில்லாத காரணத்தால் ரசிகர்களை சந்திப்பது தாமதமானதாக ரசிகர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

 

ரஜினிகாந்த் அரசியல் வருகை சூப்பர்ஸ்டார் ரஜினி ரஜினி ரசிகர்கள் சந்திப்பு Thalaivar Fans meet Superstar Rajinikanth Rajinikanth Political entry
சினிமா

Leave a comment

Comments