குஜராத் முதல்வராக பொறுப்பேற்றார் விஜய் ரூபானி

குஜராத் முதல்வராக பொறுப்பேற்றார் விஜய் ரூபானி

காந்திநகர்: குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து, அம்மாநில முதல்வராக இரண்டாவது முறையாக விஜய் ரூபானி பொறுப்பேற்றுக் கொண்டார்.

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அண்மையில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த 18-ம் தேதியன்று வெளியாகின. அதில், பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 77 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதையடுத்து, குஜராத் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட பாஜக, அம்மாநில முதல்வரை தேர்வும் செய்யும் பணியில் ஈடுபட்டது. அதன்படி நடைபெற்ற எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், விஜய் ரூபானியை மீண்டும் முதல்வராக தேர்வு செய்ய ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதேபோல், நிதின் படேல் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் இரண்டாவது முறையாக அம்மாநில முதல்வராக விஜய் ரூபானி பொறுபேற்றுக் கொண்டார். அவருக்கு குஜராத் மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, துணை முதல்வராக நிதின் படேல் மற்றும் அமைச்சர்கள் 20 பேரும் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மகாராஷ்டிர மாநில முதல்வர் பட்நாவிஸ், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்  உள்ளிட்டட பலர் கலந்து கொண்டனர்.

பாஜக குஜராத் விஜய் ரூபானி பிரதமர் மோடி குஜராத் முதல்வர் அமித்ஷா Amit shah PM Modi Vijay Rupani BJP
இந்தியா

Leave a comment

Comments