தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

டெல்லி: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

 

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் டி20 தொடர் நேற்று நிறைவடைந்தது. 3 டி20 போட்டிகளை வென்றதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக டி20 தொடரை கைப்பற்றியது. இதனால் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களை இழந்த இலங்கை அணி வெறுங்கையுடன் தாயகம் திரும்பியது. இந்நிலையில், அடுத்ததாக இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு 6 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது.

 

தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான அணி விவரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. மொத்தம் 17 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் பின்வருமாறு:

 

விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர்

 

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 01-ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெறுகிறது. இந்திய அணி வரும் 27-ஆம் தேதி தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு செல்லவிருக்கிறது.

south africa team india cricket bcci virat kohli ms dhoni கிரிக்கெட் விராட் கோலி
விளையாட்டு

Leave a comment

Comments