ஏர்டெல், ஜியோ, ஐடியாவை தொடர்ந்து வோடஃபோனும் புதிய ஆஃபரை அறிவித்தது

ஏர்டெல், ஜியோ, ஐடியாவை தொடர்ந்து வோடஃபோனும் புதிய ஆஃபரை அறிவித்தது

டெல்லி: ஏர்டெல், ஜியோ, ஐடியாவை தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வோடஃபோனும் புதிய  ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.

 
ரூ.199 விலையில் நாளொன்றுக்கு 1ஜிபி வழங்கும் திட்டத்தை முதலில் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோவும் அதே திட்டத்தில் மிகச் சிறிய மாற்றங்கள் செய்து ஹேப்பி நியூ இயர் 2018’ என்ற பெயரில் அறிவித்தது. ஏர்டெல் மற்றும் ஜியோவுக்கு நிறுவனங்களுக்கு போட்டியாக ஐடியா நிறுவனமும் ரூ.199 திட்டத்தை ஹிமாச்சல் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. 

 
அதன்படி, ரூ.199 விலையில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் நாளொன்றுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி தினமும் 250 நிமிடங்கள் இலவச வாய்ஸ் கால் சலுகையாக வழங்கப்படுகிறது. மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.199 திட்டத்தை அறிவித்துள்ளதன் மூலம் தானும் களத்தில் ஆக்டிவ்வாக இருப்பதை வோடஃபோன் உறுதி செய்துள்ளது.

vodafone airtel idea rs.199 plan tech news technology reliance ஏர்டெல் ஜியோ ஐடியா
தொழில்நுட்பம்

Leave a comment

Comments