பிளாக்பெர்ரி 10, விண்டோஸ் 8.0 பிளாட்பார்ம்களில் டிச.31-ஆம் தேதியுடன் வாட்ஸ்அப் சேவை ரத்து

பிளாக்பெர்ரி 10, விண்டோஸ் 8.0 பிளாட்பார்ம்களில் டிச.31-ஆம் தேதியுடன் வாட்ஸ்அப் சேவை ரத்து

டெல்லி: பிளாக்பெர்ரி 10, விண்டோஸ் 8.0 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன் கொண்ட மொபைல் பிளாட்பார்ம்களில் டிச.31-ஆம் தேதியுடன் வாட்ஸ்அப் சேவை ரத்து செய்யப்படவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பழைய மொபைல் பிளாட்பார்ம்களில் சேவையை நிறுத்த உள்ளதாக கடந்தாண்டு தொடக்கத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்பிறகு இந்தாண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்தது. இருப்பினும், பழைய மொபைல் பிளாட்பார்ம்களில் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் சேவையை தொடர்ந்து வழங்கி வந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு காலக்கெடுவை வாட்ஸ்அப் நிறுவனம் தன் அதிகாரப்பூர்வ பிளாகில் அறிவித்துள்ளது. அதன் படி, பிளாக்பெர்ரி ஓ.எஸ், பிளாக்பெர்ரி 10, விண்டோஸ் 8.0 மற்றும் அதற்கு முந்தைய  வெர்ஷன் கொண்ட மொபைல் பிளாட்பார்ம்களில் டிச.31-ஆம் தேதியுடன் வாட்ஸ்அப் சேவை ரத்து செய்யப்படவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் பிளாகில் கூறியிருப்பதாவது: “இது எங்களுக்கு கடினமான ஒரு முடிவாகும்பழைய மொபைல் பிளாட்பார்ம் கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்கள் டிச.31-ஆம் தேதிக்கு முன்பாக புதிய வெர்ஷன் கொண்ட ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ் போன்களுக்கு மாறுவதன் மூலம் தொடர்ந்து வாட்ஸ்அப் சேவைகளை பயன்படுத்தி மகிழ முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

whatsapp blackberry windows mobile smartphone tech news வாட்ஸ்அப்
தொழில்நுட்பம்

Leave a comment

Comments