இந்திய ‘ஜியோமி’ பயனாளர்கள் ரிப்பேர் ஸ்டேடஸை இனி ஆன்லைனில் கண்காணிக்க முடியும்

இந்திய ‘ஜியோமி’ பயனாளர்கள் ரிப்பேர் ஸ்டேடஸை இனி ஆன்லைனில் கண்காணிக்க முடியும்

டெல்லி: ரிப்பேர் செய்ய கொடுக்கப்பட்ட ஜியோமிஸ்மார்ட்போன் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆன்லைன் மூலமாக கண்காணிக்கும் வசதி எம்.ஐ இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் ரிப்பேர் ஆகியதால் வரும் மனஉளைச்சல் எப்படி இருக்கும் என்பது பலரும் அறிந்த ஒன்று தான். அந்த ஸ்மார்ட்போனை ரிப்பேருக்கு கொடுத்த பிறகு, அது குறித்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் சேவை மையத்தை அழைத்து பேச வேண்டும். இல்லையெனில், நேரடியாகவே சேவை மையத்திற்கு போக வேண்டியதிருக்கும். இதனால் நிறைய நேரம் வீணாகிறது.

இந்த பிரச்னையை தங்களது வாடிக்கையாளர்கள் சந்திக்க கூடாது என்பதற்காக ஜியோமி நிறுவனம் புதியதாக ஒரு வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி "track your device status" என்ற புதிய பகுதியை எம்.ஐ இணையதளத்தில் ஜியோமி நிறுவனம் இணைத்துள்ளது. இந்த பகுதியில் மொபைல் எண் அல்லது ஆர்டர் எண்ணை அளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஓடிபி எண் அனுப்பப்படும். அதை பதிவு செய்த பிறகு, ரிப்பேருக்கு கொடுத்த ஸ்மார்ட்போன் தற்போது எந்த நிலையியல் இருக்கிறது, எந்தளவிற்கு சரி செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரத்தை அறிந்து கொள்ள முடியும்.

தொழில்நுட்பம்

Leave a comment

Comments