சாலை விபத்தில் பலியான ரசிகருக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி!

சாலை விபத்தில் பலியான ரசிகருக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி!

திருவண்ணாமலை: சாலை விபத்தில் பலியான ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்ட கார்த்தி ரசிகர் மன்ற நிர்வாகியான ஜீவன்குமார் தனது நண்பர்களுடன் நேற்று இரவு சென்னையில் இருந்து திருவண்ணாமலை சென்றுள்ளார். தாம்பரம்-இரும்புலியூர் மேம்பாலத்தில் சென்ற கார் நிலை தடுமாறி கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஜீவன்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். திருமணமாகி 3 மாதங்களே ஆன ஜீவன்குமாரின் மரணம் அவரது குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகரின் இழப்பை கேள்விப்பட்ட நடிகர் கார்த்தி இரவோடு இரவாக ஜீவன்குமாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சோகத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி, தலைபோகும் காரியமாக இருந்தாலும் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

 

 

நடிகர் கார்த்தி ரசிகர் பலி சாலை விபத்து ரசிகர் மன்ற நிர்வாகி கார்த்தி அஞ்சலி Karthi fan death Karthi pays tribute Karthi fans club
சினிமா

Leave a comment

Comments