ஜப்பான்–ரஷ்யாவில் ‘பாகுபலி 2’!

ஜப்பான்–ரஷ்யாவில் ‘பாகுபலி 2’!

சென்னை: எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ‘பாகுபலி 2’ திரைப்படம் ஜப்பான் மற்றும் ரஷ்யாவில் வெளியாகவுள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவுக்கு புகழ் சேர்த்த ‘பாகுபலி’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் இப்படத்தை ஜப்பான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. ஜப்பானில் வருகிற டிச.29ம் தேதியும், ரஷ்யாவில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை ‘பாகுபலி’ படத்தின் தயாரிப்பாளர் ஷோபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜப்பான், ரஷ்யாவில் ‘பாகுபலி 2’ வெளியாகும் நிலையில் சீனா வெளியீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பாக்ஸ் ஆபீஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

 


 

பாகுபலி பிரபாஸ் ஜப்பானில் பாகுபலி ரஷ்யா அனுஷ்கா ஷெட்டி எஸ்.எஸ்.ராஜமௌலி பாகுபலி 2 Baahubali 2 Baahubali The Conclusion Prabhas Anushka Shetty SS.Rajamouli Jappan Russia screening
சினிமா

Leave a comment

Comments