புத்தாண்டு சலுகையாக ரூ.3300 சர்ப்ரைஸ் கேஷ்பேக் ஆஃபரை அறிவித்தது ஜியோ

புத்தாண்டு சலுகையாக ரூ.3300 சர்ப்ரைஸ் கேஷ்பேக் ஆஃபரை அறிவித்தது ஜியோ

டெல்லி: புத்தாண்டு விழாக்கால சலுகையாக ரூ.3300 கேஷ்பேக் ஆஃபரை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

 

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என வரிசையாக பண்டிகைகள் தொடர்ந்து வருவதால், முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. அதன்படி, ஜியோ நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் ஜனவரி 15-ஆம் தேதிக்குள் ரூ.399 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3300 வரை கேஷ்பேக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

 

மேற்கண்ட மதிப்பில் ரீசார்ஜ் செய்யும் பிரைம் வாடிக்கையாளர்கள் அனைவருக்குமே ‘மை ஜியோ’ செயலிக்கு மூலமாக ரூ.400 கேஷ்பேக் அளிக்கப்படும் என உத்தரவாதமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, சர்ப்ரைஸ் ஆஃபராக ரூ.2600 வரை ஆன்லைன் ஷாப்பிங் கூப்பன்கள் கிடைக்கவும் வாய்ப்பிருப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. வாலெட்டுகள் மூலம் ரீசார்ஜ் வாடிக்கையாளர்களுக்கு ரூ.300 வரை கேஷ்பேக் கிடைக்க கூடும் என ஜியோ தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம்

Leave a comment

Comments