இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் மெட்ரோ நகரங்கள் பட்டியலில் ‘சென்னை’ முதலிடம்

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் மெட்ரோ நகரங்கள் பட்டியலில் ‘சென்னை’ முதலிடம்

டெல்லி: இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் உள்ள 6 மெட்ரோ நகரங்களில் சென்னையில் தான் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் சுமார் 43 லட்சம் பெண்கள் வசிக்கின்றனர். இந்தியாவின் மற்ற மெட்ரோ நகரங்களைக் காட்டிலும், சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நடக்கின்றன. சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 544ஆக பதிவாகியுள்ளன. சென்னையில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 12 பேர் தான் பாதிக்கப்படுவதாக குற்ற ஆவண புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 
 
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரமாக டெல்லி முதலிடத்தை வகிக்கிறது. சுமார் 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பார்த்தால், டெல்லியில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வருகிறது. இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் மெட்ரோ நகரங்கள் பட்டியலில் மும்பை இரண்டாவது இடத்திலும், கொல்கத்தா 3வது இடத்திலும், பெங்களூரு 5வது இடத்திலும் உள்ளன.

இந்தியா

Leave a comment

Comments