‘ஓப்போ ஏ75’ மற்றும் ‘ஓப்போ ஏ75எஸ்’ ஸ்மார்ட்போன்கள் தைவானில் அறிமுகம்

‘ஓப்போ ஏ75’ மற்றும் ‘ஓப்போ ஏ75எஸ்’ ஸ்மார்ட்போன்கள் தைவானில் அறிமுகம்

டெல்லி: ஓப்போ ஏ75’ மற்றும் ஓப்போ ஏ75எஸ்என்ற 2 புதிய ஸ்மார்ட்போன்களை ஓப்போ நிறுவனம் தைவானில் அறிமுகம் செய்துள்ளது.

மெமரி ஸ்டோரேஜ் தவிர, இவ்விரு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை ஆகும். ஓப்போ ஏ75’ ஸ்மார்ட்போன் 32ஜிபி மெமரியும், ‘ஓப்போ ஏ75எஸ்ஸ்மார்ட்போன் 64ஜிபி மெமரியும் கொண்டிருக்கின்றன. கருப்பு மற்றும் ஷாம்பெயின் ஆகிய இரு வகையான நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த ஸ்மார்ட்போன்கள் 6 இன்ச் டிஸ்பிளே, 4ஜிபி ரேம், 16 எம்.பி ரியர் கேமரா மற்றும் 20 எம்.பி செஃல்பி கேமரா, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், எஃப்.எம் ரேடியோ, 3200 எம்ஏஎச் பேட்டரி திறன் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், ஹோம் பட்டனில் கைரேகை சென்சார் வசதியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ஓப்போ ஏ75’ விலை ரூ.23,506 (தோராய மதிப்பு) எனவும், ‘ஓப்போ ஏ75எஸ்விலை ரூ.24,850 (தோராய மதிப்பு) எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

oppo smartphone tech news technology oppo a75
தொழில்நுட்பம்

Leave a comment

Comments