பிஎஸ்என்எல்-டீடெல் நிறுவனங்கள் இணைந்து வெளியிடும் ‘டீடெல் டி 1’ மொபைல்; விலை ரூ.499 மட்டுமே!

பிஎஸ்என்எல்-டீடெல் நிறுவனங்கள் இணைந்து வெளியிடும் ‘டீடெல் டி 1’ மொபைல்; விலை ரூ.499 மட்டுமே!

டெல்லி: பிஎஸ்என்எல்-டீடெல் நிறுவனங்கள் இணைந்து ரூ.499 விலை கொண்ட டீடெல் டி 1’ என்ற செல்போனை வெளியிட உள்ளன.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் துறை அதிவேகமாக வளர்ந்து வந்தாலும், இன்னமும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் குறைந்த விலை கொண்ட செல்போன்களின் வர்த்தகம் குறையவில்லை. கோடிக்கணக்கான ஏழை,எளிய மக்கள் தகவல் தொடர்புக்காக விலை குறைந்த செல்போன்களையே பயன்படுத்துகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, பிஎஸ்என்எல்-டீடெல் நிறுவனங்கள் இணைந்து ரூ.499 விலை கொண்ட டீடெல் டி 1’ என்ற செல்போனை வெளியிட திட்டமிட்டுள்ளன.

டீடெல் டி 1’ செல்போனை ரூ.499-க்கு வாங்கும்போது அதனுடன் ரூ.103 டாக்டைம் ஆஃபர் வழங்கப்படுகிறது. அந்த ஆஃபர் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதிலிருந்து பிஎஸ்என்எல் - பிஎஸ்என்எல் செல்போன் நம்பர்களுக்கு பேச நிமிடத்திற்கு 0.15 பைசா வசூலிக்கப்படும். பிஎஸ்என்எல் - வேறு நெட்வொர்க் நம்பர்களுக்கு பேச நிமிடம் ஒன்றுக்கு 0.40 பைசா வசூல் செய்யப்படுகிறது. 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதியில் முதல் செல்லுபடியாகும் இந்த ஆஃபர், இந்தியா முழுவதும் கிடைக்கப்பெறும் வகையில் வழி செய்யப்பட்டுள்ளது என அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த 'டீடெல் டி 1' மொபைல் 1.44 இன்ச் மோனோ டிஸ்பிளே, ஆல்பா நியூமரிக் கீபேடு, 650 எம்ஏஎச் பேட்டரி திறன், டார்ச் லைட், போன் புக், எஃப்.எம் ரேடியோ, வைப்ரேஷன் மோடு, ஸ்பீக்கர் என்று மிகவும் அத்தியாவசிய வசதிகளை உள்ளடக்கியுள்ளது. மிகச் சமீபத்தில் தான், பிஎஸ்என்எல்-மைக்ரோமேக்ஸ் நிறுவனங்கள் ஒன்றிணைந்து விலை குறைந்த பாரத் 1’ என்ற 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

bsnl detel d1 phone
தொழில்நுட்பம்

Leave a comment

Comments