ஏர்டெல், ஜியோவைத் தொடர்ந்து விஓஎல்டிஇ சேவை தொடங்கவுள்ள வோடஃபோன்

ஏர்டெல், ஜியோவைத் தொடர்ந்து விஓஎல்டிஇ சேவை தொடங்கவுள்ள வோடஃபோன்

டெல்லி: ஏர்டெல், ஜியோ நிறுவனங்களை தொடர்ந்து வோடஃபோனும் வருகிற ஜனவரி மாதம் முதல் விஓஎல்டிஇ சேவையை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக மும்பை, குஜராத், டெல்லி, கர்நாடகா மற்றும் கொல்கத்தா ஆகிய மாநிலங்களில் விஓஎல்டிஇ சேவையை தொடங்கவுள்ளதாக வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வோடஃபோன் நிர்வாக இயக்குநர் சுனில் சூட் கூறுகையில்,“புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளுடன் வோடஃபோன் நிறுவனம் எதிர்கால தேவைக்காக தயாராக உள்ளது. இந்த விஓஎல்டிஇ சேவை மூலம் வாடிக்கையாளர்கள் எச்.டி தரத்தில் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்என்று கூறினார்.

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் ஏற்கனவே விஓஎல்டிஇ சேவையை வழங்கி வருகின்றன. தற்போது அந்த வரிசையில் மூன்றாவது தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடஃபோன் இணைகிறது. இந்தாண்டு செப்டம்பர் மாதம் 4ஜி விஓஎல்டிஇ சேவையை ஏர்டெல் நிறுவனம் மும்பையில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வோடஃபோனும் விஓஎல்டிஇ சேவையில் கவனம் செலுத்துவதால், டெலிகாம் துறையில் போட்டி வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பம்

Leave a comment

Comments