"ஒரு தீர்வு சொல்லட்டா #Friends"; உளவியல் பிரச்னையை தீர்க்கும் டாப் தமிழ் நியூஸின் புதிய முயற்சி

"ஒரு தீர்வு சொல்லட்டா #Friends"; உளவியல் பிரச்னையை தீர்க்கும் டாப் தமிழ் நியூஸின் புதிய முயற்சி

சென்னை: உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்ப்பதற்காக உளவியலாளர் குமரன் குமணன் டாப் தமிழ் நியூஸ் மூலம் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க இருக்கிறார்.

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் உடல்நலத்தை விடவும் மிக முக்கியமானது மனநலம். மனநலம் சிறிது பிசகினாலும் அதன் விளைவுகள் எங்கு சென்று முடியும் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. தற்போதைய உலகம்  மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்த பரபரக்கும் உலகத்தில் பணம் சம்பாதிப்பதற்காக மனிதர்கள் பறந்து கொண்டிருக்கிறோம். அதில் நமக்கு பணமும், புகழும் கிடைத்தாலும் அதோடு இணைந்து கிடைப்பது மன உளைச்சல். அந்த மன உளைச்சல் தனிப்பட்ட நபர் மட்டுமின்றி சுற்றி இருப்பவர்களையும் கடும் வேதனைக்குள்ளாக்குவது.

தற்போதுள்ள நாகரீக வளர்ச்சியால் பெரும்பாலானோர் தனிமையை விரும்பி வருகின்றனர். தனிமை அழகானது. ஆனால் அதே தனிமை எவ்வளவு அழகானதோ அந்த அளவுக்கு ஆபத்தானது. அந்த தனிமையை ஒருவர் எப்படி உபயோகப்படுத்தி கொள்கிறார் என்பதுதான் இங்கு முக்கியம். ஆனால் பலருக்கு தனிமை மன உளைச்சலைத்தான் அதிகப்படுத்துகிறது. அந்த மன உளைச்சல் மன சிதைவுக்கு இழுத்து செல்கிறது. இதனால் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.


இப்படி மன உளைச்சல், வாழ்வை பற்றிய பயம், குழப்பத்தில் சிக்கி தவித்து வருபவர்களை மீட்பதற்காக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் ஒரு முயற்சியை ஆரம்பித்திருக்கிறது. 

மன உளைச்சலில் சிக்கி தவிப்பவர்கள், வாழ்க்கை குறித்த பயங்களில் உழன்று கொண்டிருப்பவர்கள் தங்களது பயம், குழப்பம் என எதனை வேண்டுமானாலும் கேள்விகளாக அனுப்புங்கள். உளவியலில் முதுகலை பட்டம் முடித்திருக்கும் உளவியலாளர் குமரன் குமணன் வாரந்தோறும் உங்களின் குழப்பங்களை தீர்த்து உங்களுக்கு தெளிவான தீர்வு அளிக்க உள்ளார். 

உளவியலாளர் உளவியலாளர் குமரன் குமணன் குமரன் குமணன் உளவியல் உளவியல் பிரச்னை மன உளைச்சல் மன அழுத்தம் Psychologist Kumaran kumanan Psychology
லைப்ஸ்டைல்

Leave a comment

Comments