“வியூகம் தான் முக்கியம்...எந்த நாட்டில் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல”: விராட் கோலி பேட்டி

“வியூகம் தான் முக்கியம்...எந்த நாட்டில் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல”: விராட் கோலி பேட்டி

மும்பை: வியூகங்களை களத்தில் சரியாக செயல்படுத்தினால் போதும்; எந்த நாட்டில் விளையாடுகிறோம் என்பது பிரச்சனையே கிடையாதுஎன்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
 
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இந்திய அணி அபாரமாக விளையாடி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதனையொட்டி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றது. அதற்கு முன் விராட் கோலி பேட்டியளித்தார்.
 
 அப்போது அவர் கூறியதாவது, “இந்திய அணியின் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு அடுத்து வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி விளையாடவில்லை. இலங்கை தொடரில் பங்கேற்றாலும், அங்குள்ள தட்பவெப்ப நிலை இந்தியாவில் இருப்பதை போன்றே இருந்தது.

 
வெளிநாட்டு பயணம் என்றாலே மனரீதியான நெருக்கடி தான் என்ற நிலையை மாற்றிக்காட்ட விரும்புகிறோம். எங்களது திறமையை யாருக்காகவும் நிரூபிக்க வேண்டியது கட்டாயம் இல்லை. இந்திய நாட்டிற்காக 100 சதவீத முயற்சியை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் கடமை.
 
தென்ஆப்பிரிக்காவில் நிலவும் தட்பவெப்ப நிலை கடினமாக இருக்கும் என்கிறார்கள். ஆனால், ஒரு பேட்ஸ்மேன் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறார் என்பதை பொறுத்தே அவரது ஆட்டமும் இருக்கும். சரியான மனநிலையில் இல்லையெனில், இந்தியாவில் விளையாடுவது கூட கடினமாகவே இருக்கும். பயிற்சியை சிறப்பாக செய்து, வியூகங்களை களத்தில் சரியாக செயல்படுத்தினால் போதும். எந்த நாட்டில் விளையாடுகிறோம் என்பது பிரச்சினை இல்லை.
 
இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

விளையாட்டு

Leave a comment

Comments