கூகுள் பிளே ஸ்டோரில் 100 மில்லியன் டவுன்லோடுகளை கடந்த பேடிஎம் செயலி

கூகுள் பிளே ஸ்டோரில் 100 மில்லியன் டவுன்லோடுகளை கடந்த பேடிஎம் செயலி

டெல்லி: கூகுள் பிளே ஸ்டோரில் 100 மில்லியன் டவுன்லோடுகளை பேடிஎம் செயலி கடந்துள்ளது. இந்தியாவில் இவ்வளவு அதிகமான டவுன்லோடுகளை கடந்த முதல் பணபரிவர்த்தனை செயலியாக பேடிஎம் திகழ்கிறது.

இதுகுறித்து பேடிஎம் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் தீபக் அபோட் கூறுகையில், “பேடிஎம் குழுவின் அபார முயற்சிக்கான சான்றாக இந்த சாதனை வெற்றி உள்ளது. எங்கள் இலக்கை எட்டுவதற்கான உந்துதலை இந்த சாதனை கொடுத்துள்ளது” என்று கூறினார்.

பேடிஎம் செயலி மூலமாக ஆன்லைன் ரீசார்ஜ், ரசீது கட்டணங்கள், சினிமா டிக்கெட் புக்கிங், டிராவல் புக்கிங் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். பேடிஎம் செயலியின் சேவையை நாடு முழுவதும் பெரிய வியாபாரிகள் முதல் சிறு வணிகர்கள் வரை பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பம்

Leave a comment

Comments