ரூ.309 பிளானில் மாற்றம் செய்து ஜியோவுடன் கடும் போட்டியிடும் ஐடியா நிறுவனம்

ரூ.309 பிளானில் மாற்றம் செய்து ஜியோவுடன் கடும் போட்டியிடும் ஐடியா நிறுவனம்

டெல்லி: ரூ.309 பிளானில் நாளொன்றுக்கு 1ஜிபி டேட்டா அளித்து வந்த ஐடியா நிறுவனம், தற்போது அதை 1.5ஜிபியாக உயர்த்தி அதிரடி மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.

ரூ.309 பிளானை முதலில் ஏர்டெல் நிறுவனம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து மற்ற டெலிகாம் நிறுவனங்களும் அதே திட்டத்தை அறிமுகம் செய்தன. இப்போது ஜியோ, ஐடியா, வோடபோன் என அனைத்து முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களும் ரூ.300 விலையில் நாளொன்றுக்கு 1ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, 100 மெசேஜ்கள் ஆகிய சலுகைகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ரூ.309 பிளானில் ஒரு அதிரடி மாற்றத்தை ஐடியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதாவது, அத்திட்டத்தில் முன்னர் நாளொன்றுக்கு 1ஜிபி அளித்து வந்த நிலையில் 1.5 ஜிபியாக டேட்டா அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 28 நாட்களுக்கு 28 ஜிபி அளவாக இருந்த டேட்டா 42 ஜிபியாக உயர்ந்துள்ளது. இந்த அதிரடி மாற்றம் மற்ற நிறுவனங்களை காட்டிலும், ரிலையன்ஸ் ஜியோவுக்கு கடும் போட்டி அளிக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில், ஜியோவும் ரூ.309 பிளானில் நாளொன்றுக்கு 1.5ஜிபி டேட்டா அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பம்

Leave a comment

Comments