சிபிஎம் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாலகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 சிபிஎம் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாலகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பால கிருஷ்ணனுக்கு திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித்தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி, அவர்கள் மத்தியிலும் அடித்தட்டு மக்கள் மத்தியிலும் நற்பெயர் பெற்றுள்ள பாலகிருஷ்ணன், தன்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் பிரச்னை மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள பல்வேறு முக்கியமான பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் மிக ஆழமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் வாதங்களை எடுத்து வைத்தவர் என்பதை நானறிவேன். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, பலமுறை சிறை சென்றுள்ள அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் சீர்மிகு பணியாற்றி வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

DMK cpm balakrishnan mk stalin tamilnadu திமுக சிபிஎம் பாலகிருஷ்ணன் முக ஸ்டாலின்
தமிழகம்

Leave a comment

Comments