அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்பும் பணி தொடக்கம்: துணை ராணுவப்படை

அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்பும் பணி தொடக்கம்: துணை ராணுவப்படை

மிசோரம்: இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மிசோரமில் தஞ்சமடைந்த 1600-க்கும் மேற்பட்ட அகதிகளை மியான்மருக்குத் திருப்பி அனுப்பும் பணி தொடங்கியுள்ளதாக துணை ராணுவப்படை தெரிவித்துள்ளது

மியான்மர் ராணுவம் மற்றும் அராக்கன் ஆயுதக் கிளிர்ச்சிக் குழுவிடையே வெடித்த வன்முறை காரணமாக 8 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் மியான்மரை விட்டு இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற மிகப்பெரிய  இடப்பெயர்வு இது என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆயுதக் கிளர்ச்சிக் குழுவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் காரணமாக மியான்மரின் எல்லையோரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தெற்கு மிசோரமில் கடந்த நவம்பர் 25-ம் தேதி முதல் தஞ்சமடைந்துள்ளனர். ராணுவ நடவடிக்கை காரணமாக பெருமளவிலான ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் வங்கதேசத்தில் தஞ்மடைந்திருக்கும் நிலையில், மிசோரமில் புத்த மற்றும் கிறிஸ்துவ அகதிகள் தஞ்சமடைந்தனர். மியான்மரின் எல்லையோர மாநிலமான சின் பகுதியைச் சேர்ந்த இவர்கள், ஜாகாய், மியூ குமி  பழங்குடியினர் எனத் தெரிய வந்துள்ளது

இந்நிலையில், மிசோரமில் தஞ்சமடைந்த 1600-க்கும் மேற்பட்ட அகதிகளை மியான்மருக்குத் திருப்பி அனுப்பும் பணி தொடங்கியுள்ளதாக துணை ராணுவப்படை (அசாம் ரைபில் ஃபோர்ஸ்) தெரிவித்துள்ளது.

மியான்மரில் தற்போது நிலைமை சுமூக நிலைக்கு வந்துள்ளதால்  தஞ்சமடைந்திருக்கும் அகதிகளை திருப்பி அனுப்பும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கூறி இந்திய அரசு, அவர்களை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

keywords: Rohingyas Rohingya Refugees Refugees Myanmar ரோஹிங்கியாக்கள் ரோஹிங்கியா அகதிகள் அகதிகள்
உலகம்

Leave a comment

Comments