காமத்தை தூண்டும் டார்க் சாக்லெட்!

காமத்தை தூண்டும் டார்க் சாக்லெட்!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாக்லெட்டை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. ‘கடவுள்களின் உணவு’ என்றழைக்கப்படும் சாக்லெட் உணர்வுடனும், காதலுடனும் அதிக தொடர்புடையவை ஆகும். காதலை சொல்ல மட்டுமல்லாமல், காமம் கொள்வதற்கும் டார்க் சாக்லெட் உதவுகிறது.


மூளையில் இன்பத்தை தூண்டும் பீனைல் எத்திலமைன் மற்றும் செரொட்டோனின் ஆகிய வேதிப்பொருள்கள் சாக்லெட்டில் உள்ளன. இது மனிதர் உடலின் உணர்ச்சி பெருக்கினையும், ஆற்றல் நிலையையும் அதிகரிக்கச் செய்வதால், சாக்லெட் சாப்பிடும்போது காம உணர்வு தூண்டப்படுகிறது.


டார்க் சாக்லெட் சாப்பிடும்போது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். ஆகையால், உடலுறவுக்கு முன் உங்களது துணைக்கு டார்க் சாக்லெட்டை பரிசளித்து காம இன்பத்தில் திளைத்திடுங்கள்.


காம இச்சைக்கு மட்டுமல்லாது, உடலின் ஆரோக்கியத்திற்கும் டார்க் சாக்லெட் பெரிதும் உதவுகிறது. வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த டார்க் சாக்லெட்டை உண்பதால், இதயம், மூளை, ரத்த சோகை, ரத்த சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளை குணப்படுத்தும்.

 


Dark Chocolate Sex Drive Sexual Pleasure Dark Chocolate benefits Health benefits Chocolate Day காம உணர்வு டார்க் சாக்லெட் உடலுறவுக்கு உதவு டார்க் சாக்லெட் ஆரோக்கியம்
லைப்ஸ்டைல்

Leave a comment

Comments