வங்கதேசத்திலிருந்து ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டம்: முதற்கட்ட பட்டியலில் ஒரு லட்சம் பேர்

வங்கதேசத்திலிருந்து ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டம்: முதற்கட்ட பட்டியலில் ஒரு லட்சம் பேர்

டாக்கா: மியான்மர்- வங்கதேசம் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை வங்கதேசத்திலிருந்து திருப்பி அனுப்புவதற்கான அதிகாரப்பூர்வப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக 1 லட்சம் ரோஹிங்கியா அகதிகளைக் கொண்ட பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மரின் ரக்ஹைன் பகுதியில் ஏற்பட்ட வன்முறைக் காரணமாக லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் உயிருக்கு பயந்து வங்கதேச பகுதியில் தஞ்சமடைந்திருந்தனர்.  இவர்களை மியான்மருக்கே திருப்பி அனுப்புவதற்கான ஒப்பந்தம் மியான்மர்- வங்கதேசம் இடையே கடந்த நவம்பர் 23-ஆம் தேதி கையெழுத்தானது. இந்நிலையில், வங்கதேச வெளியுறவுச் செயலாளர் ஷாஹீதுல் ஹக்கு தலைமையில் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் அடுத்த கட்ட நகர்வு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

 

இதுகுறித்து வங்கதேசத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “தஞ்சமடைந்த 8 லட்சத்து 50 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகளின் பெயர் பட்டியல் ஏற்கனவே எங்களிடம் உள்ளது. முதல் கட்டமாக இடம்பெயர்ந்த 1 லட்சம் ரோஹிங்கியா அகதிகளின் பெயர் பட்டியலை மியான்மரிடம் கொடுப்போம். அந்தப் பட்டியலை மியான்மர் ஆராய்ந்த பிறகு, அடுத்த பட்டியலை அனுப்புவோம்என்று தெரிவித்தார்.  

 

ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தின் படி, 2016-ஆம் ஆண்டிற்கு பிறகு வங்கதேசத்திற்குள் தஞ்சமடைந்த ரோஹிங்கியாக்கள் தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள் அல்லது திருப்பி அனுப்பப்படும் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இந்தப் பணி பல்வேறு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

Leave a comment

Comments