‘சாம்சங் கேலக்ஸி ஜெ2’ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் இணையத்தில் வெளியானது

‘சாம்சங் கேலக்ஸி ஜெ2’ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் இணையத்தில் வெளியானது

டெல்லி: ‘சாம்சங் கேலக்ஸி ஜெ2 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் ரஷ்யாவை சேர்ந்த விற்பனை இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளது.

 

‘சாம்சங் கேலக்ஸி ஜெ2ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்த வண்ணம் இருந்தன. ஆனால் அவை அனைத்தும் உறுதிபடுத்தப்படாத தகவல்களாகவே இருந்து வந்தன. இந்நிலையில், ரஷ்யாவை சேர்ந்த ஆன்லைன் விற்பனை இணையதளம் ஒன்றில் ‘சாம்சங் கேலக்ஸி ஜெ2’ ஸ்மார்ட்போனும் இடம்பெற்றுள்ளது. எனினும், அந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கான பகுதிகள் கொடுக்கப்படவில்லை. ஆனால், ‘சாம்சங் கேலக்ஸி ஜெ2’ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

 

இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.8878 ஆக (ரஷ்ய பண மதிப்பில் 7990 ரூபிள்) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘சாம்சங் கேலக்ஸி ஜெ2 ஸ்மார்ட்போன் 5 இன்ச் டிஸ்பிளே, 1.5ஜிபி ரேம், 16ஜிபி உள்ளடக்க மெமரி, 8 எம்.பி ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி செஃல்பி கேமரா, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், ப்.எம் ரேடியோ, 2600 எம்ஏஎச் பேட்டரி திறன் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இயங்குதளம் மற்றும் விற்பனைக்கு வெளியாக உள்ள தேதி குறித்த தகவல்கள் ஏதும் அந்த ரஷ்ய இணையதளத்தில் குறிப்பிடப்படவில்லை.

தொழில்நுட்பம்

Leave a comment

Comments