‘சாம்சங் கேலக்ஸி நோட் 8’ பேட்டரி 0% எட்டியதும், மீண்டும் சார்ஜ் செய்ய முடியவில்லை: வாடிக்கையாளர்கள் புகார்

‘சாம்சங் கேலக்ஸி நோட் 8’ பேட்டரி 0% எட்டியதும், மீண்டும் சார்ஜ் செய்ய முடியவில்லை: வாடிக்கையாளர்கள் புகார்

டெல்லி: சாம்சங் கேலக்ஸி நோட் 8’ ஸ்மார்ட்போனின் பேட்டரி 0% எட்டிய பிறகு மீண்டும் சார்ஜ் செய்ய முடியவில்லை என்று சில வாடிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
 
கடந்தாண்டு சாம்சங் நிறுவன கேலக்ஸி நோட் 7’ ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகள் வெடித்து, தீப்பிடித்த விவகாரம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் கேலக்ஸி நோட் மாடல் ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் திரும்ப பெற்றது. 

இந்நிலையில், ‘சாம்சங் கேலக்ஸி நோட் 8’ ஸ்மார்ட்போனின் பேட்டரி 0% எட்டிய பிறகு மீண்டும் சார்ஜ் செய்ய முடியவில்லை என அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சில வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 
சார்ஜ் போடும்போது ஸ்மார்ட்போனில் சிறு எல்இடி பல்பு ஒளிரும். சாம்சங் கேலக்ஸி நோட் 8’ ஸ்மார்ட்போனில் பேட்டரி 0% வந்ததும் சார்ஜ் செய்யும்போது அந்த எல்இடி பல்பு ஒளிரவில்லை என பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர். சாம்சங் நிறுவனத்தின் ஒரிஜினல் சார்ஜரை பயன்படுத்தியும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 8’ ஸ்மார்ட்போன்களை திரும்ப பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பம்

Leave a comment

Comments