ஷாப்பிங் ஸ்பெஷல்: டிரெண்டியாகும் பிளவுஸ் டிசைன்கள்!

ஷாப்பிங் ஸ்பெஷல்: டிரெண்டியாகும்  பிளவுஸ் டிசைன்கள்!

புடவைகளில் பல விதங்கள் இருந்தாலும்  எப்போதும் காட்டன் புடவைக்கு என்று பெண்களிடம் ஒரு தனி இடம் உள்ளது. ஒரு பெண்ணை எளிமையாகவும் அதேசமயம் ராயலாகவும்  காண்பிக்க காட்டன் புடவைக்கு நிகர் எதுவுமில்லை. அத்தகைய காட்டன் புடவைகளுக்குத் தான் இன்று எண்ணற்ற தனித்துவமான பிளவுஸ் டிசைன்கள் வந்துவிட்டன.  ரெகுலர் ப்ளவுஸ்களை விட்டு டிரெண்டி ஸ்டைலுக்கு மாறினால் அத்தனை கண்களையும் ஈர்க்க முடியும்

வீட்டு வேலை செய்யும் பெண்கள் தொடங்கி ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள் என எத்தகைய தொழில் புரிவோருக்கும் ஏற்றவை மற்றும் சவுகரியமானவை காட்டன் புடவைகள். பட்ஜெட்டிற்கு ஏற்பவும் 100 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. காட்டன் புடவையைப் பொருத்தவரை பிளவுஸ் ஸ்டைலிஷாக இருந்தால் தான் எடுப்பாக இருக்கும்.

அழகான பிளவுஸ் டிசைன்கள்!

கலம்காரி பிரிண்ட், விலங்குகள், ப்ளாக் பிரிண்ட்ஸ், பெரிய டிசைன்கள் கொண்ட மோட்டிவ்ஸ் என இவைதான் தற்போது டிரெண்டில் உள்ளன. அதிலேயே வித்தியாசமான நெக் டிசைன்கள் கொண்டு அசத்தலாக மேட்ச் செய்கின்றனர். காட்டன் புடவைக்கு எம்பராய்டரி ஒர்க் எடுப்பாக இருக்காது என்பதால் அதைத் தவிர்த்துவிடுங்கள்.

போட் நெக்!

இப்போது காட்டன் புடவைகளுக்கு போட் நெக் டிசைன் அதிகமாக விரும்பப்படுகிறது. குறிப்பாக கலம்காரி  வந்ததிலிருந்தே போட் நெக் டிசைனும் பிரபலமாகிவிட்டது. எனவே கலம்காரி புடவை, பிளெயின் காட்டன் புடவை என எதுவாக இருந்தாலும் அதற்குக் காண்ட்ராஸ்ட் நிறங்களைத்  தேர்வு செய்து, போட் நெக் வைத்துத் தையுங்கள். அதிலேயே முதுகுப் பகுதிக்கு ஓவல் ஷேப்பில் ஓப்பன் வைத்து பட்டன் வைத்தால் நன்றாக இருக்கும். இந்த  நெக் டைப்பிற்கு முழங்கை அளவு அல்லது மணிக்கட்டு வரை நீளமான ஸ்லீவ் அல்லது ஸ்லீவ்லெஸ் வைத்தால் தோற்றத்தை வித்தியாசமாகக் காட்டும்.

சைனீஸ் காலர்!

அதேபோல் கழுத்தை ஒட்டிய சைனீஸ் காலர் வைத்துத் தைப்பதும் நன்றாக இருக்கும். இந்த கட் ஒர்க்குக்கு ஏற்ப பின் புறம் ஸிப் வைத்துத் தைப்பதும் புதுவரவாக உள்ளது.

ஸ்லீவ் லெஸ் பிளவுஸ்!

கோடைக் காலத்தில் இந்த ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்தான் கை கொடுக்கும். டிசைன்கள் இல்லாத பிளெய்ன் மெட்டீரியல் இந்த டிசைனுக்கு பொருத்தமாக இருக்கும். ஸ்ட்ராப் பட்டையாக வைத்து பின்புறம் பெரிய வட்டமான நெக் டிசைன் வைக்கலாம். அதில் சுங்கு வைத்தால் இன்னும் கூடுதல் அழகு கூடும்.

ஃப்ளேர் டைப் ஸ்லீவ்!

மணிக்கட்டுப் பகுதி வரை ஸ்லீவ் வைத்து அதன் முனையில் ஃப்ளேர் கட்ஸ் வைத்துத் தைப்பது பரவலாக இருக்கிறது. சினிமாப் பிரபலங்களும் தற்போது அவ்வாறுதான் பிளவுஸ் அணிகின்றனர். அதேபோல் முழங்கை வரை ஸ்லீவ் வைத்து இதே ஃப்ளேர் கட்ஸை வைக்கின்றனர்.

ஷர்ட் டைப்!

ஷர்ட் போல் முன்புறம் பட்டன் வைத்துத் தைப்பது அசத்தலான தோற்றத்தை ஏற்படுத்தும். இதற்கு நீளமான கோடுகள், அல்லது டிசைன்கள் கொண்ட காட்டன் ஃபேப்ரிக் வாங்கினால் பிளெயின் புடவைக்கு மேட்சாக இருக்கும்.

அடுத்ததாக , ஷர்ட் அணிந்து அதன் மேல் காட்டன் புடவை அணிவதும் இன்றைய டிரெண்ட். இந்த டிசைன் பிளவுஸை நீங்கள் விரும்பினால், அதற்கு பிளெயின் காட்டன் புடவையை தேர்ந்தெடுக்கலாம்.

பின்புற நெக் டிசைன்!

பிளவுசின் பின்புறத்திற்கு எண்ணற்ற டிசைன்கள் வந்துவிட்டன. ஆனால், காட்டன் புடவைக்கு எளிமையாக இருக்க வேண்டும்.  கிராஸ் லைன் கொண்ட கட்டங்கள் , நடுப் பகுதியில் மட்டும் வட்டம், பெரிய ஓப்பன் வைத்து அடிப்பகுதியில் சிறிய அளவு ஸ்ட்ராப், பின் புறம் ஓப்பனே இல்லாமல் வைப்பது, வலது புறத்தில் மட்டும் பட்டன் டிசைன் வைப்பது என அதன் டிசைன் வகைகள் நீண்டு கொண்டே போகும். அதில் உங்கள் புடவைக்கு ஏற்ப பொருத்தமானதை தேர்வு செய்யுங்கள்.

புடவைக்கு ஏற்ப ஸ்டைலிங்!

காட்டன் புடவைக்கு கருப்பு அல்லது பிரௌவுன் நிற ஸ்லிங் பேக் அணிவது சரியான தேர்வு. அதற்கு ஏற்ப மோதிரம் வைத்த ஃபிளாட் செருப்பு அணியுங்கள். மேக் அப் மினிமலாக இருக்கட்டும். லிப்ஸ்டிக் மற்றும் காஜலை ஹைலைட் செய்யுங்கள்.  ஹெவியான அணிகலன்களைத் தவிர்த்து மினிமல் டிசைன் கொண்ட காதணி மற்றும் கழுத்தணி அணியுங்கள்.

ஹேர் ஸ்டைல் விஷயத்தில் கவனம் கொள்வதும் அவசியம். லூஸ் ஹேர் அல்லது ஹை போனிடெயில் போடலாம். ஃபிஷ்டெயில் பிரெய்ட் கூட எடுப்பாக இருக்கும். இவை இரண்டும் பின் புற நெக் டிசைனை தனித்துக் காட்டும்.

life style shopping shopping special trendy trends fashion sarees cotton sarees புடவை காட்டன் ஷாப்பிங்
லைப்ஸ்டைல்

Leave a comment

Comments