ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் எவ்வளவு லாபத்தை மொபைல் நிறுவனங்கள் பெற்று வருகின்றன தெரியுமா?

ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் எவ்வளவு லாபத்தை மொபைல் நிறுவனங்கள் பெற்று வருகின்றன தெரியுமா?

டெல்லி: ஒவ்வொரு ஐபோனுக்கும் சுமார் 151 டாலர்களை (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.9600) லாபமாக ஆப்பிள் நிறுவனம் பெறுவதாக கவுண்டர் பாய்ண்ட்இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை நாளுக்கு, நாள் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. கூடவே, ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியும் உச்சத்தை தொடுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு ஸ்மார்ட்போன் சாதனத்திற்கும் எவ்வளவு லாபத்தை மொபைல் நிறுவனங்கள் பெறுகின்றன என்ற ஆய்வு முடிவை பிரபல கவுண்டர் பாய்ண்ட்இணையதளம் வெளியிட்டுள்ளது.
 
2017-ஆம் ஆண்டின் 3வது காலாண்டின் (ஜூலை முதல் செப்டம்பர்) விற்பனை அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் அதிக லாபத்தை பெறும் நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது. அந்நிறுவனம், ஒவ்வொரு ஐபோனுக்கும் சுமார் 151 டாலர்களை லாபமாக பெறுகிறது. இது, 2வது இடத்திலிருக்கும் சாம்சங் நிறுவனத்தின் லாபத்தைக் காட்டிலும் 14% அதிகமாகும். சாம்சங் நிறுவனம் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் 31 டாலர்களை லாபமாக ஈட்டுகிறது.

 
ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் 15 டாலர்களை லாபமாக பெற்று ஹவாய் நிறுவனம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் 67 சதவீத வளர்ச்சியை ஹவாய் நிறுவனம் பெற்று வருவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓப்போ நிறுவனம் 14 டாலர்களையும், விவோ நிறுவனம் 13 டாலர்களையும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் லாபத்தை பெற்றுள்ளன. மிகக் குறைந்த லாபத்தை பெற்று வரும் நிறுவனமாக ஜியோமி இருக்கிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் 2 டாலர்களையே (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.128) அந்நிறுவனம் லாபமாக ஈட்டியுள்ளது.

தொழில்நுட்பம்

Leave a comment

Comments